கோவையில் தமிழகத்திலேயே முதல் முறையாக பத்திரிகையாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை மற்றும் பல்வேறு துறைகளில் கால் பதித்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் தன்னிகரில்லா புகழ்பெற்ற *சென்ரியோ குழுமத்தின் அங்கமான யாவும் இனிதே அறக்கட்டளையின்* சார்பில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா வின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை *யாவும் இனிதே அறக்கட்டளை* செய்து வருகிறது என்பது நிதர்சனமான உண்மையாகும்.
அது சமயம் கோவை சிங்காநல்லூர் அருகிலுள்ள உப்பிலி பாளையத்தில்அமைந்துள்ள அருள்மிகு மாசாணி அம்மன் கோவில் மண்டபத்தில் வைத்து,கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதன் பேரில், யாவும் இனிதே அறக்கட்டளை, சர்வதேச உரிமைகள் கழகம், மற்றும் தமிழ்நாடு சித்த மருத்துவ அறக்கட்டளை, ஆகியவை ஒன்றாக இணைந்து பத்திரிகையாளர்களின் வாழ்வாதாரம் சிறப்படைய நிவாரண பொருள்களாக அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள்.முகக் கவசம், மற்றும் சேனிடைசர் போன்றவற்றை நிவாரண பொருள்களாக வழங்கினார்கள்.
மேலும் நிவாரணப் பொருள் வழங்குவதற்கு முன்னதாக பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு சர்வதேச உரிமைகள் கழகத்தின் கோவை மாவட்ட தலைவரும், தமிழ்நாடு சித்த மருத்துவ அறக்கட்டளையின் நிறுவனத் தலைவருமான *செவாலியே விருதாளர்* மருத்துவர்.ம.கதிர்வேல் அவர்கள் தலைமையிலும், ஸ்ரீ தர்மராஜா அருள் பீடம் தவத்திரு.கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள் முன்னிலை வகிக்க, *யாவும் இனிதே அறக்கட்டளையின்* கோவை கிளையின் மேலாளரும், சர்வதேச உரிமைகள் கழகத்தின் கோவை மாவட்ட துணைத் தலைவரும், வணிக நண்பன் பத்திரிக்கையின் இணை ஆசிரியருமான அ.பாலசுப்பிரமணியன் அவர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழாவினை முதன்மை தலைமை ஏற்று நடத்திக் கொடுத்தார் என்பதும், அவர்களுடன் சு. முருகேஷ், டிராவல்ஸ் மாரிச்சாமி, மென்ஸ் பார்க் கார்த்திக், மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த இனிய நிகழ்வில் அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெயர் பட்டியலை சங்கத்தின் தேசிய தலைவர் டி.ஆர்.கவியரசு அவர்களின் ஆலோசனைப்படி செவாலியே விருதாளர் மருத்துவர் கதிர்வேல் அவர்கள் வாசித்து அறிமுகம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் *அதிரடி பெ.காளிதாஸ்* தலைமையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்று நிறைவு பெற்றது. இறுதியில் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் அதிரடி காளிதாஸ் நிவாரண பொருட்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.