சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்

சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை இன்று அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார் . இந்நிகழ்வில் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் மற்றும் புளியந்தோப்பு சரக துணை ஆணையர் ராஜேஸ்கண்ணன் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கொரோனா தடுப்பு பணிக்காக தமிழக அரசு பலகோடிகள் செலவு செய்துள்ளதாகவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சித்த மருத்துவத்தின் மூலம் 486 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இதுவரை 206 நபர்கள் குணமடைந்துள்ளனர் என்றும், தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து குறிப்பாக தேனி,கொங்கு மண்டலம் போன்ற ஊர்களில் இருந்து இங்கே வந்து சிகிச்சை பெறுவதாகவும், அதிகமாக சித்த மருந்து உற்பத்தி செய்து சிகிச்சை அளிக்க முயற்சி செய்து வருவதாகவும் , தெரிவித்தார்


Popular posts
தாளையடி கோட்டை கண்மாய் பணிகள் மேற்கொள்வதில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் நீதிமன்றம் உத்தரவின் படி ஓட்டெடுப்பு நடைபெற்றது.
Image
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image
முதுகுளத்தூர் கடலாடி ஒன்றிய திமுக பொறுப்பாளராக ஆப்பனூர் மு.ஆறுமுகவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image