ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட நாகதேவன்பாளையம்,வெள்ளாங்கோவில்,சிறுவலூர்,அயலூர்,கோட்டுபுள்ளம்பாளையம்,அளுக்குளி,கலிங்கியம் ஆகிய ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், அத்திக்கடவு அவிநாசி திட்டம் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிவடையும் எனவும், சிறுவலூர் பகுதியில் அத்திகடவு அவிநாசி திட்டத்தின் மூலம் ஏரி,குளங்கள் நிரப்பப்படும் எனவும்,பவானி-சத்தி சாலையில் நான்கு வழி சாலை அமைக்கப்படும் எனவும், கூட்டுறவு சங்கம் மூலம் பல வழிகளில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.மேலும் 1முதல் 9வகுப்பு வரை பாட புத்தகங்கள் பெற்றோர்களின் விருப்ப முறையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாதம் இறுதியில் வெளியிடப்படும் எனவும், 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அடுத்த மாதம் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் வழங்கப்படும் எனவும், 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அந்தந்த பள்ளிகளில் பெற்று கொள்ளலாம் அல்லது வலைத்தளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். உடன் மாவட்ட ஆட்சியர் கதிரவன், கோட்டாட்சியர் ஜெயராமன்,ஆவின் தலைவர் காளியப்பன்,தாசில்தார் சிவசங்கர்,மாவட்ட கவுன்சிலர் அனுராதா,ஒன்றிய குழு தலைவர் மௌதீஸ்வரன்,வட்டார வளர்ச்சி அலுவலர் பஷீர்,ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், மகாலட்சுமி ,ஊராட்சி மன்ற தலைவர்கள் சிறுவலூர் வனிதா வேலுச்சாமி , கோட்டுப் புள்ளாம் பாளையம் முத்துக்குமார் ,. கலிங்கியம் கோகிலா அருள் ராமச்சந்திரன், உறுப்பினர்கள் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


Popular posts
தாளையடி கோட்டை கண்மாய் பணிகள் மேற்கொள்வதில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் நீதிமன்றம் உத்தரவின் படி ஓட்டெடுப்பு நடைபெற்றது.
Image
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
முதுகுளத்தூர் கடலாடி ஒன்றிய திமுக பொறுப்பாளராக ஆப்பனூர் மு.ஆறுமுகவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Image