தாளையடி கோட்டை கண்மாய் பணிகள் மேற்கொள்வதில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதால் நீதிமன்றம் உத்தரவின் படி ஓட்டெடுப்பு நடைபெற்றது.

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் தாளையடி கோட்டை குரூப் கிராம விவசாய பாசன கண்மாயில் ரூ. 85.48 லட்சம் மதிப்பிட்டில் கண்மாய் குடி மராமரத்து பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து கண்மாயில் மேமங்கலம் நடராஜன் மற்றும் தாளையடிக்கோட்டை கார் தலைமையிலான சங்கத்தினர் தனித்தனியாக பதிவு செய்தனர். இதில் நடராஜன் தலைமையில் பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதற்கு கார் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன்படி ஜூலை 17ஆம் தேதி நீதிமன்ற உத்தரவின்படி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கட கிருஷ்ணன் தலைமையில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சமாதானம் ஏற்படவில்லை. தொடர்ந்து நேற்று நீதிமன்ற உத்தரவின் பெயரில் பாசனதாரர்கள் மத்தியில் பரமக்குடி உதவி தாசில்தார் மேகலா தலைமையில் ஒட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 109 பேர் வாக்களித்தனர் தொடர்ந்து நடராஜன் 57 வாக்குகளும், காரு 44 வாக்குகளும் பெற்றனர். 8 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. வாக்கெடுப்பில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கடகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் லதா, வருவாய் ஆய்வாளர் வள்ளி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற வெட்பாளர்ருக்கு தாசிதார் சேகர் சான்றிதலை வழங்கினார். டி.எஸ்.பி., வேல்முருகன் தலைமையில் நயினார்கோவில் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்


Popular posts
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image
முதுகுளத்தூர் கடலாடி ஒன்றிய திமுக பொறுப்பாளராக ஆப்பனூர் மு.ஆறுமுகவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image