மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

மேதகு  APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது முதுகுளத்தூர்  அப்துல் கலாம் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை தாய்மண் திட்டத்தின் கீழ் இன்று இராஜசிங்கமங்கலத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது. இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா தலைமை தாங்கினார். மரக்கன்றுகளை பாதுகாக்கும் வலைக்கான ஏற்பாடுகளை இஸ்லாமிக் சோசியல் சர்வீஸ் மலேசியா நிர்வாகிகள் செய்தனர். இந்நிகழ்வில் இராஜசிங்கமங்கலத்தைச் சேர்ந்த அம்ஜத் , சீனி,சோமு,கனேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் கூறுகையில், இராஜசிங்கமங்கலத்தின் பல தெருக்களில் கடந்த ஆண்டு மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்கினோம். மரக்கன்றுகளை நல்ல முறையில் பராமரித்து வருபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என கூறி இருந்தோம். தற்பொழுது ஒரு சில இடங்களில் மரக்கன்றுகள் நல்ல முறையில் வளர்ந்து வருகிறது. மேலும் முறையான பராமரிப்பின்றி ஒரு சில இடங்களில் மரக்கன்றுகள் அழிவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இராஜசிங்கமங்கலத்தில் பசுமை புரட்சி ஏற்பட இந்த வருடமும் மரக்கன்றுகள் நடும் பணிகளை தொடங்க இருக்கிறோம். மரக்கன்றுகளோடு பராமரிக்க வலைகளும் வழங்க இருக்கிறோம். மேலும் கண்மாய் ஊரணிகளைச் சுற்றி பனை விதை விதைப்பு நிகழ்வுகளையும் முன்னெடுக்க இருக்கிறோம் என்று கூறினார்


Popular posts
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image
முதுகுளத்தூர் கடலாடி ஒன்றிய திமுக பொறுப்பாளராக ஆப்பனூர் மு.ஆறுமுகவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
Image
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image