பரமக்குடி வட்டாரத்தில் கூட்டுப் பண்ணை திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தில் புதர் செடிகளை அகற்றி சிறு தானியங்கள் சாகுபடி செய்யும் திட்டத்தினை வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு செய்தார்

பரமக்குடி வட்டாரத்தில் தரிசான நிலத்தில் உள்ள செடிகளை அகற்றி சிறுதானியம் சாகுபடி . பரமக்குடி வட்டாரத்தில் கூட்டுப் பண்ணை திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தில் புதர் செடிகளை அகற்றி சிறு தானியங்கள் சாகுபடி செய்யும் திட்டத்தினை வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு செய்தார். பரமக்குடி வட்டாரத்தில் வேளாண்மை துறையின் கூட்டு பண்ணை திட்டம் 2019-20 ஆம் ஆண்டின் பேத்தனேந்தல் கிராமத்திற்கு லேசர் மூலம் நிலம் சமப்படுத்தும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்த லேசர் நிலம் சமப்படுத்தும் கருவியின் செயல் விளக்கம் பெறுதல் கிராமத்தில் விவசாய ஆர்வலர் குழு மற்றும் விவசாய உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களின் முன்னிலையில் விவசாயிகளின் வயல்களில் செய்து காண்பிக்கப்பட்டது. இந்த செயல் விளக்கம் விவசாயிகளுக்கு திருப்தியாக உள்ளதா என்பதை வேளாண்மை இணை இயக்குனர் குணபாலன் பார்வையிட்டு விவசாயிகளிடம் கேட்டறிந்தார். லேசர் நிலம் சமப்படுத்தும் கருவி மூலம் நிலத்தை சமன் செய்வதால் நீர் பாய்ச்சும் போது நீரானது சீராக அனைத்து இடத்திற்கு விரைந்து சென்று அடையும் இது பயிரின் வளர்ச்சியை அதிகப்படுத்தும் பிறகு சூரியூர் கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள சிறப்பு திட்டத்திற்காக 5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் சாகுபடி இல்லாமல் தரிசாக புதர் செடிகள் அதிகமாக வளர்ந்து நிலங்களில் செடிகளை அகற்றி சிறு தானியம் சாகுபடி செய்யும் திட்டத்திற்கு தரிசு நிலங்களை தேர்வு செய்து செடிகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதனை வேளாண்மை இணை இயக்குனர் குணபாலன், பார்வையிட்டார் தரிசு நிலத்தை விளை நிலமாக மாற்றி சிறு தானியங்கள் சாகுபடி செய்வதற்கு ஏக்கருக்கு 50, சதவீதம் மானியம் 4000, வழங்கப்படவுள்ளது. நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் கண்ணையா , பரமக்குடி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன், வேளாண்மை அலுவலர்கள் சீதாலட்சுமி ,அபிநயா, துணை வேளாண்மை அலுவலர்கள் சுருளிவேலு, சக்திமோகன் ,சத்தியா, மற்றும் போரிஸ்எல்ஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image