திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மின்சார கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடியை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த வகையில் திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து கே.என். நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு காரணமாக மின் பயன்பாடு கணக்கீடு செய்ய வில்லை. அதனால் ஒட்டுமொத்தமாக கணக்கிடபட்டு ஒவ்வொரு வீடுகளுக்கும் அதிகப்படியான யூனிட்கள் பயன்பாடு இருந்துள்ளது. இதைப் பயன்படுத்தி அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அன்டை மாநிலங்களில் மின் கட்டணங்களுக்கான சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் அதிகப்படியாக வசூல் நடைபெறுகிறது. அண்டை மாநிலங்களில் மின் கணக்கீடு மற்றும் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. பல விஷயங்களுக்கு அண்டை மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிடுவார்கள். ஆனால் இந்த விஷயத்திற்கு அப்படி ஒப்பீடு செய்யவில்லை. கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். பல நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதி மாத சம்பளம் கூட வழங்கப்படவில்லை. இந்நிலையில் வழங்கப்பட்ட சம்பளத்தையும் ஒட்டுமொத்தமாக மின் கட்டணத்தை செலுத்தினால் மக்கள் கஷ்டப்படும் சூழ்நிலை உருவாகும். தற்போது கூடுதலாக செலுத்தப்பட்ட கட்டணம் எதிர்காலத்தில் சரி செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது சாத்தியப் படாத விஷயமாகும். அரசியலுக்காக மின் கட்டணம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. எதிர்காலத்தில் சரிசெய்யாமல் தற்போது இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள திமுக திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்திலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசின் மின் கட்டண வசூலை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இந்த இரண்டு ஆர்ப்பாட்டங்களிலும் திமுகவினர் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் அணிந்து கொண்டும் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image