பரமக்குடி அருகே மணல் அள்ளி வந்த லாரியை தடுத்தவர் மீது வழக்கு தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

பரமக்குடி அருகே மணல் அள்ளி வந்த லாரியை தடுத்தவர் மீது வழக்கு தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா குறிச்சி கிராமத்தில் இருந்து தினமும் ஏராளமான லாரிகளில் சவுடு மண் அள்ளிக் கொண்டு கமுதக்குடி வைகை ஆற்று வழியாக லாரிகள் வருகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் பாலம் மிகவும் சேதம் அடைந்து வருகிறது .மேலும் அதன் வழியாக வரும் குடிநீர் குழாய்கள் உடைந்து கிராம மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த கமுதக்குடி கிராம மக்கள் சவுடு மண் அள்ளிவந்த லாரிகளை வழிமறித்துள்ளனர். இதைப் பற்றி தகவல் அறிந்ததும் பரமக்குடி டி.எஸ்.பி. வேல்முருகன், மற்றும் போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதைத்தொடர்ந்து லாரிகளை மறைத்த கமுதக்குடி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மோகன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அந்த வழக்கு பதிவை ரத்து செய்யக்கோரி கமுதக்குடி கிராம மக்கள் திரண்டு பரமக்குடி தாலுகா அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தினர். பின்பு தாசில்தார் சேகரிடம் கோரிக்கை மனு அளித்தனர் பின்பு ஆர்.டி.ஓ ,டி.எஸ்.பி ,ஆகியோரிடமும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வழக்கு பதிவை ரத்து செய்ய கோரி மனு அளித்தனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image