தூத்துக்குடி மாவட்டம் தரிசு நிலங்களை மேம்படுத்தி விளை நிலங்களாக்கும் திட்டம் : அத்திமரப்பட்டியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, துவக்கி வைத்தார்

தரிசு நிலங்களை மேம்படுத்தி விளை நிலங்களாக்கும் திட்டம் : அத்திமரப்பட்டியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, துவக்கி வைத்தார் தூத்துக்குடி.  தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-21ம் ஆண்டில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை மேம்படுத்தி விளை நிலங்களாக்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று துவக்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: தமிழகஅரசு விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், இரு மடங்கு உற்பத்தி மூன்று மடங்கு லாபம் என்ற இலக்குடன் தொடர்ந்து முற்போக்கான, புதுமையான திட்டங்களை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. இந்த வருடம் 2020-21 மத்திய அரசுடன் இணைந்து பயறு வகைகள், சிறுதானியங்கள், எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாக தரிசாக போடப்பட்டுள்ள நிலங்களை மீண்டும் விவசாயம் செய்திட ஏதுவாக நிலத்தைப் பண்படுத்தும் செலவில் 50 சதவிகித மானியம் வழங்கும் திட்டத்தை அரசால் செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை, 2020-21ம் ஆண்டில் தரிசாக உள்ள நிலங்களை பண்படுத்தி சிறுதானிய பயிர்கள் பயிரிடுவதற்கு 250 எக்டர் இலக்கும், பயறு வகை பயிர்கள் பயிரிட 250 எக்டர் இலக்கும், எண்ணெய் வித்து பயிர்கள் பயிரிடுவதற்கு 50 எக்டர் இலக்கும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி வட்டாரத்தில் தரிசாக உள்ள நிலங்களை பண்படுத்தி 40 எக்டர் பயறு வகை பயிர்கள் மற்றும் 10 எக்டர் சிறுதானிய பயிர்கள் பயிரிடப்படுகிறது. தற்போது கோரம்பள்ளம் - 2 வருவாய் கிராமத்தின் கீழுள்ள அத்திமரப்பட்டியில் 5 ஆண்டுகளுக்கு மேலாக தரிசாக கிடந்த 4.5 ஏக்கர் தரிசு நிலம் தேர்வு செய்யப்பட்டு முட்புதர்கள் நீக்கும் பணிகள் இன்று (நேற்று) துவங்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி வட்டாரத்தில் கூட்டுடன்காடு, முடிவைத்தானேந்தல், தளவாய்ப்புரம் மற்றும் பாறைக்குட்டம் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் உள்ள விவசாயிகளின் தரிசு நிலங்களை தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விளை நிலங்களாக்கும் திட்டம் செயல்படுத்தப்படு உள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் மேம்படையும். எனவே விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி பயன்பெறலாம் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முகைதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், துணை இயக்குநர்கள் தமிழ்மலர் (மத்திய அரசு திட்டம்), பழனிவேல் (மாநில அரசு திட்டம்), ஜெயசெல்வின் இன்பராஜ் (உழவர் பாதுகாப்பு திட்டம்), வேளாண்மை துறை உதவி இயக்குனர் மார்ட்டின் ராணி (தூத்துக்குடி), புதுக்கோட்டை வட்டார வேளாண்மை தொழில்நுட்ப விவசாய ஆலோசனைக்குழு தலைவர் வீ.இளங்கோவன், உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image