மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் கொரோனா நோய்த் நோய் தொற்றிற்காக புதிதாக ஆயிரம் படுக்கை வசதிகளுடன் அமைய உள்ள தற்காலிக மருத்துவ மனையை பார்வையிட அமைச்சர் ஆர் பி உதயகுமார்,

மதுரை தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் கொரோனா நோய்த் நோய் தொற்றிற்காக புதிதாக ஆயிரம் படுக்கை வசதிகளுடன் அமைய உள்ள தற்காலிக மருத்துவ மனையை பார்வையிட அமைச்சர் ஆர் பி உதயகுமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் சங்குமணி ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் ஏய்ம்ஸ் பணிகள் குறித்து பார்வையிட்டனர் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக முன்னாள் முதல்வர் காலத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு. பின்பு எய்ம்ஸ் மருத்துவமனைகாக மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஜூலை 3ஆம் தேதி இந்திய அரசு அரசாணையில் மதுரை எய்ம்ஸ் பற்றியான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏய்ம்ஸ் மருத்துவமனைக்காக 224 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டு இருந்தாலும் தற்போது வருவாய்த்துறை மூலமாக வேகமாக வேலை நடைபெற்று வருகிறது. ஜப்பானிய நிறுவனமான JIICA நிறுவனத்திடமிருந்து நிதி பெறப்பட்டு ஏய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையப் பெற்றாலும் தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய மயில்கல். _கொரோனா நோய் தொற்றினால் ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு வழங்கப்படும் நிதியில் தாமதம் ஏற்படுமா என்ற கேள்விக்கு_ தொடர்ந்து joint secretary சுனில் சர்மா அவர்கள் தான் மையப்புள்ளி அவரிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம் ஏய்ம்ஸ் மருத்துவமனைகாக தனியாக இயக்குனர் போடப்பட்டு மத்திய அரசு குழு நியமித்து இதற்கான வேலைகள் தொடங்கப்பட உள்ளது. ஜூலை 31ம் தேதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திடுவதற்கான வேலைகளை செய்து வருகிறோம். நாங்களும் முதல்வர் ஆணைக்கிணங்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருக்கிறோம். ஏய்ம்ஸ் மருத்துவமனை வேலைகள் வேகமாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image