பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற நாகநாதசுவாமி திருக்கோயில் உள்ளது .

ஆடி வெள்ளியில் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடிய நாகநாத சுவாமி கோயில் பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற நாகநாதசுவாமி திருக்கோயில் உள்ளது . இங்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்களும், ராமநாதபுரம், சிவகங்கை ,விருதுநகர், மதுரை, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்கு தோஷங்கள் நீங்குவதற்காக பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டியும் வந்து செல்கின்றனர். ஆடி மாதத்தில் சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்களும் திருவிழா நடைபெறும், குறிப்பாக ஆடி வெள்ளி அன்று அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பரமக்குடி இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் நடந்து வந்து சுவாமியை தரிசித்து செல்வது வழக்கம் இதனால் ஆடி வெள்ளியன்று அதிகமான கூட்டத்துடன் வெகு சிறப்பாக சிறப்பு அபிஷேகங்களும்,ஆராதனைகளும் நடைபெறும் இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கோயில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு கிராமப்புறங்களில் உள்ள கோயில்களை திறந்தாலும் நகர்புறம் மற்றும் பிரசித்தி பெற்ற கோயில்களில் பொதுமக்கள் தரிசனத்தின் அதற்கு தடை விதித்துள்ளது. இதனால் எப்பொழுதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் என்று பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது இந்நிலையில் ஆடி வெள்ளியன்று என்பதால் உள்ளூர் கிராமங்கள் உள்ளூர் பகுதி மற்றும் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் நடந்த இரு சக்கர வாகனங்களிலும் வந்து கோயிலின் முன்பகுதியில் தேங்காய் உடைத்து சாமி கும்பிட சென்றனர் எப்பொழுதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் நாகநாதசுவாமி திருக்கோயில் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது பக்தர்களிடையே பெரும் மனக்குறையாக இருந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து பரமக்குடியை சேர்ந்த சாந்தி கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆடிவெள்ளியன்று பரமக்குடியில் இருந்து நடந்து வந்து சுவாமியை தரிசனம் செய்துவிட்டு செல்லுவோம் ஆனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இப்போது நடந்து போக முடியாமல் வீட்டில் இருந்து சாமி தரிசனம் செய்கின்றோம் நடந்து சென்று கோயிலின் முன்பு தேங்காய் உடைத்து கோபுர தரிசனம் செய்து வருகிறேம் மனநிம்மதி தரும் என்று கோவிலுக்கு வந்தால் சாமியின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் கோபுரத்தைப் பார்த்து வணங்கி வரவேண்டிய நிலை உள்ளது. இதனை தமிழக அரசு உடனடியாக கோயில்களைத் திறந்து சமூக இடைவெளியில் தரிசனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறினார்.


Popular posts
திருச்சுழி அருகே மிதிலைக்குளம் கிராமத்தில் ஓடம் தொண்டு நிறுவனம் சார்பாக,புளியங்குளம் மற்றும் மிதிலைக்குளம் கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சுழி வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையேற்று நிவாரண பொருட்கள் வழங்கினார்
Image
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
ஈரோடு :-தமிழ் புலிகள் கட்சி சார்பில் காளைமாடு சிலை அருகே மருத்துவத்துறையில் பிற்படுத்தப்பட்டோருக்கான 4 ஆண்டுகள் மறுக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை
Image