அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் மக்கள் அரசர் டாக்டர் சு.ராஜா அவர்கள் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் மக்கள் அரசர் டாக்டர் சு.ராஜா அவர்கள் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். தமிழகம் முழுவதும் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவரும், நிறுவனருமான மக்கள் அரசர் டாக்டர் சு.ராஜா அவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அறம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் டாக்டர் சு.ராஜா கலந்து கொண்டு, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பிரதமர் மோடி அவர்களின் செயல் திட்டங்கள் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், கொரோனா காலகட்டத்தில் மோடி அவர்களின் செயல்பாடுகளை உலக நாடுகள் அனைத்தும் பாராட்டியதாகவும், மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் தான் இணைந்ததாகவும் டாக்டர் சு.ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அறம் தொலைக்காட்சி CEO ஸ்ரீதர், பாடலாசிரியர் பா.விஜய், நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார், கலை, ஜனனி பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சப் : பாஜகவில் இணைந்த மக்கள் அரசர் சு.ராஜா


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image