ஈரோடு :-தமிழ் புலிகள் கட்சி சார்பில் காளைமாடு சிலை அருகே மருத்துவத்துறையில் பிற்படுத்தப்பட்டோருக்கான 4 ஆண்டுகள் மறுக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை

ஈரோடு :-தமிழ் புலிகள் கட்சி சார்பில் காளைமாடு சிலை அருகே மருத்துவத்துறையில் பிற்படுத்தப்பட்டோருக்கான 4 ஆண்டுகள் மறுக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர துணை செயலாளர் கௌதம் வள்ளுவன் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன்,மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ருத்திரன் தேசிங்கு பிரபாவதி உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து இட ஒதுக்கீடு கோரி கோஷம் எழுப்பினார்கள்.


Popular posts
பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற நாகநாதசுவாமி திருக்கோயில் உள்ளது .
Image
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
நரிக்குடி ஒன்றிய அதிமுக செயலாளர் அம்மன்பட்டி மீ.இ.ரவிச்சந்திரன் அதிமுக சார்பில் 14வது வார்டு யூனியன் கவுன்சிலர்
Image