பரமக்குடி சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 263 வது குருபூஜை விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 263 வது குருபூஜை விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் கமுதி பகுதியில் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்து கோன் அவர்களின் 263 வது குருபூஜை விழா, அழகு முத்துக் கோன் பேரவை நிறுவனத் தலைவர் வேல்ராஜ் யாதவ் அவர்களின் ஆணைக்கினங்க சிறப்பாக கொண்டாடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முதுகுளத்தூர் அருகே உள்ள உடையநாதபுரம் ,கொழுந்துறை, பொக்கரனேந்தல் போன்ற கிராமங்களில் அழகு முத்து கோன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. கொழுந்துரை கிராமத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோன் அவர்களின் நினைவைப் பறைசாற்றும் விதமாக கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி நடைபெற்றது இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சரண்யா செல்வராஜ் பரிசுகளை வழங்கினார். பொக்கரனேந்தல் கிராமத்தில் முகக்கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூர் கிராமத்தில் உள்ள முதியோர் ஆதரவற்ற பசும்குடில் காப்பகத்தில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட முதியோருக்கு அன்னதானமும், முப்பதாயிரம் மதிப்பீட்டில் அரிசி , காய்கறிகள் , போர்வை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது . அதோடல்லாமல் உடையநாதபுரம் ஊராட்சியில் தூய்மைப் பணியாளர் களுக்கு அரிசி மற்றும் காய்கறி நிவாரண தொகுப்புகள் அழகுமுத்துக்கோன் பேரவை சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல் வழங்கினார். நிகழ்ச்சியில் அழகுமுத்துகோன் பேரவையின் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் கனகராஜ் ஒன்றிய அவைத்தலைவர் செல்வம் கொள்கை பரப்பு செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image