பரமக்குடி பகுதியில் மணல் திருடிய 2 நபர்கள் கைது

பரமக்குடி பகுதியில் மணல் திருடிய 2 நபர்கள் கைது பரமக்குடி அருகே உரப்புளி கிராமத்தில் வயல்வெளிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய தாக இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்தனர் பரமக்குடி அருகே உள்ளது உரப்புளி கிராமம் வைகை ஆற்று பகுதியில் ஒட்டி இருப்பதால் வயல்வெளிகளில் மணல் அதிக அளவில் கிடைக்கிறது இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் மணல் கொள்ளையர்கள் வயல்வெளிகளில் இரவு நேரங்களில் மணலை கொள்ளையடித்து வருகின்றனர். தொடர்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில் பரமக்குடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சுதந்திரதேவி, தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு வைகை ஆற்றை ஒட்டி இருக்கக் கூடிய வயல்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக வந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பேலிசார் விரைந்து சென்றனர். அப்போது அனுமதியின்றி மணல் அள்ளியதாக ஜெசிபி, டிராக்டர், டிப்பர்லாரி, என முன்று வாகனங்கள் மூலம் மணல் அள்ளியதை பறிமுதல் செய்து ஜேசிபி டிரைவர் கவியரசன், லாரி ஓட்டுநர் லோகநாதன், ஆகிய இருவரையும் வளைத்து பிடித்தனர் . இது குறித்து உரப்புளி வி.ஏ.ஓ அச்சுதாராமன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கவியரசன்,லோகநாதன் ஆகிய இருவரையும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image