முதுகுளத்தூர் அருகே துளுக்கன்குறிச்சி கிராமத்தில் 10 ஆண்டுகளாக மரத்தில் கட்டி கிடக்கும் மன நலம் பாதிக்கப்பட்டவர் அரசு நடவடிக்கை எடுக்கமா ?

முதுகுளத்தூர் அருகே துளுக்கன்குறிச்சி கிராமத்தில் 10 ஆண்டுகளாக மரத்தில் கட்டி கிடக்கும் மன நலம் பாதிக்கப்பட்டவர் அரசு நடவடிக்கை எடுக்கமா ? முதுகுளத்தூர் அருகே உள்ள துளுக்கன் குறிச்சி கிராமத்தில் 10 ஆண்குகளாக காட்டு கருவேல மரத்தில் கட்டிக் கிடக்கும் மன நலம் பாதிக்கப்பட்ட வரை காப்பாற்ற மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பாஜக ஒன்றியதலைவர் தூவல் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். முதுகுளத்தூர் அருகே உள்ள கீழச் சாக்குளம் ஊராட்சி துளுக்கன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் சீனிவாசன் (45) இவர் சிறுவயதிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக மரத்தில் கட்டப்பட்டுள்ளார். இவருடைய முத்த சகோதரி அமிர்தவள்ளி உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து பராமரித்து வருகிறார். கட்டை அவிழ்த்து விட்டால் ஊர் மக்களை கல்லால் அடித்து காயப்படுத்தியுள்ளதால் இவர் நிரந்தரமாக கட்டப்பட்டுள்ளாராம் . காப்பாற்ற வேண்டும் : 10 ஆண்டுகளாக காட்டக் கருவேல்மரத்தில் கட்டப்பட்டுள்ள சீனிவாசனை மீட்டு அரசு மனநல காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றி பாஜக அமைப்பாளர் தூவல் சத்திய முர்த்தி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். சீனிவாசன் குறித்த வீடியோ சமூக வலை தலங்களில் வைரலாகி வருகிறது.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image