முதுகுளத்தூர் வேளாண்மை அலுவலகத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விவசாயி களுக்கு இடுபொருட்களை யூனியன் சேர்மன் ஆர்.தர்மர் வழங்கினார்

முதுகுளத்தூர் வேளாண்மை அலுவலகத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விவசாயி களுக்கு இடுபொருட்களை யூனியன் சேர்மன் ஆர்.தர்மர் வழங்கினார் முதுகுளத்தூர் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு இடுபொருட்களை யூனியன் சேர்மன் ஆர்.தர்மர் வழங்கினார். முதுகுளத்தூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா யூனியன் சேர்மன் ஆர்.தர்மர் தலைமையில் நடைபெற்றது .வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் அனைவரையும் வரவேற்றார். சமூக இடைவெளியூடன் நடை பெற்ற விழாவில் விவசாயிகளுக்கு இடுபொருட்களை யூனியன் சேர்மன் ஆர்.தர்மர் வழங்கினார். முதுகுளத்தூர் வட்டாரத்தில் வேளாண்மை அலுவலகம் மூலம் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் 10.40 லட்சம் நிதி உதவியுடன் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் ( அரிசி) 2.40 லட்ரம் நிதி உதவியுடன் பயறு வகைகள் 8. 23 லட்சம் நிதி உதவியுடன் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் , மற்றும் 8.00 லட்சம் நிதி உதவியுடன் இயற்கை முறை விவசாயத்தை ஊக்கு விப்பதற்காக பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் முதலான மத்திய அரசு நிதி உதவி பெறும் திட்டங்களும் ரூ.80. லட்சம் நிதி உதவியுடன் தமிழ்நாடு நிலைக்கத் தக்க வேளாண்மை வளர்ச்சி இயக்கம் ,ரூ.4.63 லட்சம் நிதி உதவியுடன் தமிழ்நாடு பருத்தி சாகுபடி இயக்கம் முதலான மாநில அரசு நிதி உதவியுடன் மாணியத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விவசாயத்திற்கு தேவையான முதன்மை இடுபொருட்களான தரமான சான்று பெற்ற விதைகள் காற்றின் உள்ள தழைச்சத்தை கிரகித்து செடிக்கு தரக்கூடிய உயிர் உரங்கள் மற்றும் பயிர் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமான நுண்ணுட்ட உரங்கள் பேண்றவை மானியத்தில் வழங்கப்படுகின்றன. மகிண்டி , விக்கிரபாண்டியபுரம் சாத்தனூர் விவசாயிகளுக்கு சான்று பெற்ற நெல் விதைகள் நுண்ணூட்ட உரம் உயிர் உரங்களும், சான்று பெற்ற உளுந்து விதைகளும் வழங்கப்பட்டன . மேலும் உலையூர் , வளநாடு விவசாயிகளுக்கு குதிரைவாலி, நெல் , உளுந்து விதைகள் விநியோகம் செய்யப்பட்டன . கோடை உழவிற்காக ஏக்கருக்கு ரூ 500 மானியமும் வழங்கப்படும் . விவசாயிகளுக்கு 8 ஆயிரம் மதிப்பிலான பருத்தி எடுக்கும் எந்திரம் வழங்கப்பட்டன . மேலும் நல்லூர் ,கீழக் குளம் கே.ஆர் பட்டணம் ஆகிய கிராமங்களில் குதிரை வாலி விதைகள் நுண்ணூட்ட உரம் , வேஸ்ட்டிகம்போசர் மருந்துகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் வேளாண்மை அலுவலர் தமிழ் அகராதி துணை வேளாண்மை அலுவலர் தனதுரை ஆகியோர் உடனிருந்தனர்


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image