விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சங்கரபாண்டியபுரம் பகுதியில் நாட்டு புற நையாண்டி மேள இசை கலைஞர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

நாட்டு புற நையாண்டி மேள இசை கலைஞர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சங்கரபாண்டியபுரம், பகுதியில் நாட்டு புற நையாண்டி மேள இசை கலைஞர்கள் 30 க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் வசித்து வருகிறார்கள்.தற்போது கொரானோ எனும் கொடிய நோய் காரணமாக, தமிழகத்தில் அனைத்து தொழில்களும் முடங்கிப் போய் கிடக்கின்றன. இதனால் தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, கடந்த 3 மாதங்களாக திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கள் வாழ்வாதாரமான நாட்டு புற நையாண்டி மேள இசை கலை நிகழ்ச்சிகள் இன்றி இவர்கள் தவிக்கின்றனர். ஆகவே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image