சேலம் அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. ஜங்ஷன் ஆ. அண்ணாதுரை வழங்கினார்.

சேலம் அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. ஜங்ஷன் ஆ. அண்ணாதுரை வழங்கினார். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மத்திய மாநில அரசுகள் சார்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போதும் அந்த ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது ஊரடங்கு உத்தரவால் ஏழை மக்கள் பலர் வேலை வாய்ப்பை இழந்து மிகவும் கஷ்டப்படுகின்றனர் அரசு முடிந்த வரை உதவி செய்து வருகிறது.இச்சூழலில் ஏழை மக்கள் உணவின்றி பசியால் வாட கூடாது என்பதற்காக அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் சேலம் மாநகரம் மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணியில் தொடர்ந்து தங்களை அர்ப்பணித்துக் கொண்டு செயலாற்றிய அம்பேத்கார் மக்கள் இயக்க மாவட்ட, மாநகர,பகுதி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் சுமார் 50 பேருக்கு 25 கிலோ கொண்ட ஒரு சிற்பம் அரிசி வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாநகரம் சூரமங்கலம் அவ்வையார் தெருவில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநில இளைஞரணி செயலாளர் ஜங்ஷன் ஆ. அண்ணாதுரை தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநில துணைத் தலைவர் ஈரோடு ஜெயராமன் அவர்களும், மாநில துணை தலைவர் எம். ஆசீர்வாதம் அவர்களும் கலந்துகொண்டார்கள். நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியை அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநில பொதுச்செயலாளர் மதுரை மகா. ராமகிருஷ்ணன் அவர்கள் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்து கொரோனா நோய் குறித்த விழிப்புணர்வை இயக்க நிர்வாகிகளிடம் ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆ.அம்பேத்கார், சேலம் மாநகர தலைவர் நேரு நகர் முருகன், மாநகர செயலாளர் சுப்பிரமணி, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சித்தையன், மாவட்ட மாணவரணி செயலாளர் பாலாஜி, மாநகர கொள்கை பரப்பு செயலாளர் சந்திரசேகர், மாநகர நீலப்படை செயலாளர் பூபாலன், சூரமங்கலம் பகுதி பொறுப்பாளர் சிவசந்திரன், கல்வி மறுமலர்ச்சி இயக்கம் வழக்கறிஞர் புகழேந்தி, அம்பேத்கார் மக்கள் இயக்கம் ஓமலூர் ஒன்றிய தலைவர் ராம்ஜி, ஏற்காடு ஒன்றிய தலைவர் தியாகராஜன், வீரபாண்டி ஒன்றிய தலைவர் சிவா, பனமரத்துப்பட்டி ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், மேச்சேரி ஒன்றிய தலைவர் ஏழுமலை, ஓமலூர் ஒன்றிய மகளிர் அணி தலைவி சரஸ்வதி, மாநகர மகளிர் அணி தலைவி நவமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image