அமைச்சர் ஆர். பி.உதயகுமார் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கிட

அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கிட ஆலோசனை அமைச்சர் ஆர் பி உதயகுமார் திருவொற்றியூர், ஜூன் 17: சென்னை மாநகரத்தில் வரும் வெள்ளிக்கிழமை முதல் 12 நாட்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்கிட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் புதன்கிழமை சென்னை மணலியில் தெரிவித்தார். திருவொற்றியூர், மணலி.திரு.வி.க. நகர் உள்ளிட்ட மண்டலங்களில் அமைச்சர் உதயகுமார் புதன்கிழமை கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மணலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளருக்கு தேவையான கவச உடை, முகக்கவசம் கபசுர சூரணம் உள்ளிட்டவைகளை அமைச்சர் உதயகுமார் வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயகுமார் கூறியது, கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலுமாக ஒழிப்பதில் தமிழக அரசு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. பேரிடர் காலத்தில் மக்கள் மன உறுதியுடன் அதனை எதிர்கொள்ள வேண்டும். மேலும் இது போன்ற அவசர காலங்களில் அச்சத்தை தவிர்த்து மக்களை விழிப்புணர்வு கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஜெயலலிதாவின் அடியொற்றி நாங்களும் அதனை தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம். வரும் வெள்ளிக்கிழமை முதல் ஜூன் 30ஆம் தேதி வரை 12 நாட்களுக்கு பொது முடக்கம் சென்னை மாநகரத்தில் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் அரசு சார்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 1000 நிவாரண உதவி வழங்கப்பட உள்ளது . இந்த பொது முடக்க காலத்தில் பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். பொது முடக்க காலத்தில் பொது மக்களிடையே முழுமையான விழிப்புணர்வை ஏற்படுத்தி நோய் தொற்று இல்லாத சென்னை மாநகரத்தை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும். மேலும் பொதுமக்கள் காலத்தில் அவரவர் வீடுகளுக்கு சென்று காய்கறி மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கிட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான தன்னார்வலர்களை இணைத்து செயல்படவும் பொதுமக்கள் இந்த வசதியை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வார்கள் என்பது குறித்தும் தொடர் ஆலோசனை நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் அறிவிப்பை வெளியிடுவார். திருவொற்றியூர், மணலி பகுதியில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் மையங்கள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் . மேலும் தென்னக ரயில்வே சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் சிறப்பு வார்டு வசதிகள் கொண்ட ரயில்களை பயன்படுத்திக் கொள்வது குறித்து முதலமைச்சர் பழனிசாமி உரிய நேரத்தில் முடிவெடுப்பார். தற்போதைய நிலையில் போதுமான படுக்கை வசதிகள் சிகிச்சை மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றன என்றார் அமைச்சர் உதயகுமார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு பார்வையாளர் பங்கஜ் குமார் பன்சால் சிறப்பு அதிகாரி அவர் சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர் சீதாலட்சுமி அம்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி அலெக்சாண்டர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.குப்பன், பகுதி செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image