தமிழ்நாடு கொங்கு குல மருத்துவ குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கோவையில் தமிழ்நாடு கொங்கு குல மருத்துவர் சமுதாய சங்கத்தின் சார்பாக கோவை சிங்காநல்லூர் அருகில் உள்ள உப்பிலிபாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாசாணியம்மன் கோவில் வளாகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு விழிப்புணர்வுகள், மற்றும் நிலவேம்பு கபசுர குடிநீர் வழங்கல், மற்றும் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் சுமார் 25 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.இதில் இச்சங்கத்தின் தலைவர் உ .ப. ராமசாமி தலைமையில், செயலாளர் க .கருப்புசாமி, பொருளாளர் வா.அம்சராஜ் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளர்கள் தமிழ்நாடு சித்த மருத்துவ அறக்கட்டளை நிறுவனத் தலைவரும், சர்வதேச உரிமைகள் கழகத்தின் கோவை மாவட்ட செயலாளருமான மருத்துவர் ம.கதிர்வேல், ஸ்ரீமத் தர்மராஜா அருள்பீடம் தவத்திரு கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள், யாவும் இனிதே அறக்கட்டளை கிளை மேலாளரும், வணிக நண்பன் பத்திரிகையின் இணை ஆசிரியருமான அ.பாலசுப்பிரமணியன், இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு குழு செயலாளர் கணபதி ரவி, தி சாய் பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் மா.சீனிவாசன் நரேந்திர மோதி விச்சார் மஞ் அமைப்பின் தமிழ் மாநில மக்கள் தொடர்பாளர் கோவை மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது