ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள நம்பியூர் சாவக்கட்டு பாளையத்தில் நெசவாளர்களுக்கு நிவாரண உதவிகள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார்.





ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள நம்பியூர் சாவக்கட்டு பாளையத்தில் நெசவாளர்களுக்கு நிவாரண உதவிகள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார்.


நம்பியூர் அருகே உள்ள சவக்கட்டுபாளையம் நெசவாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

 

 நிகழ்ச்சிக்கு கோபி வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.

 

 நம்பியூர் தாசில்தார் வெங்கடேஸ்வரன் நம்பியூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மா.வெ.பாவேசு  நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் 460 நெசவாளர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு  மற்றும் நெசவு கூலி முன்பணமாக தலா ரூ 1000 வீதம் ரூ 4 லட்சத்து 60 ஆயிரமும், 2 மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரூ 3 லட்சத்திற்கான காசோலையும், நம்பியூர் வருவாய்த்துறை சார்பில் 10 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள்  ஆகியவைகளை வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் ரேவதி, சாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர் கவிதா, துணை தலைவர் சரவணகுமார் கட்சி நிர்வாகிகள் செல்வம், சேரன் சரவணன், மயில்சாமி, ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

.

 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்

 

அனைத்து இடங்களிலும் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று கொண்டுள்ளது.

 

 அதன் ஒரு பகுதியாக இன்று நம்பியூர் அருகே உள்ள சவக்கட்டுபாளையம் நெசவாளர்களுக்கு நிவாரண பணிகள் வழங்கப்பட்டது.

 

 இதில் 460 பயனாளிகளுக்கு கூலி முன்பணம் கடன் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

 

 தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டே உள்ளது.

 

 இதில் கணித ஆசிரியர்களுக்கு இ பாக்ஸ் ஆன்-லைன்  மூலம் திறன் மேம்பாட்டுக்காக 2 ஆயிரம் கணித ஆசிரியர்களுக்கு  பயிற்சிகள் நடைபெற்று வருகிறது.

 

 தென்மாநில சிறப்பு பயிற்றுனர்கள் மூலம் பிளஸ் டூ மாணவர்களுக்கு சார்ட்டட் அக்கவுன்டன்ட் பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் கற்பிக்கப்பட்டு வருகிறது.

 

 பள்ளிகளில் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவது பற்றிய கேள்விக்கு...

 

இதுகுறித்து சிறப்பு வல்லுநர்கள், மருத்துவ ஆலோசகர்கள் அனைவரிடத்திலும் விரிவான ஆலோசனைகள் பெறப்பட்டு வருகிறது அதன்பொருட்டு மாணவர்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்றுதல் கற்றுதரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்

 

உறுதியாக பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும்

 

ஓய்வுபெறும் வயது 58 இல் இருந்து 59 மாற்றம் செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு...

 

 இது முதலமைச்சர் மற்றும் இதர வல்லுனர்கள் மூலம் ஏற்படுத்தப்பட்ட கொள்கை முடிவாகும் இதை தலைமைச் செயலக அரசு ஊழியர்கள் வரவேற்று உள்ளனர் தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர் மேலும் இந்த முடிவை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும்

 

அவினாசி அத்திக்கடவு திட்டப்பணிகள் சமூக இடைவெளியை  பின்பற்றி நடைபெற்று வருகிறது.

 

எனவும் கூறினார்.






Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image