தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 42 நபர்கள் மே 1-ம் தேதி பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
மே 2-ம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அடுத்து அடுத்து வைரஸ்சால் பாதிக்கப்பட்ட நபர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில்
கெரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரத்தம் தேவைப்படும் எனில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரி முதல்வர் மற்றும் ரத்த வங்கி அலுவலர் ஆகியோர் இணைந்து தேனி மாவட்டத்திலுள்ள சமூக ஆர்வலர்களிடம் வேண்டுகோள் வைத்தனர்.வேண்டுதல்படி ஆண்டிபட்டி பெரியார் குருதிக்கொடை தலைவர் ஸ்டார் நாகராஜன் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், மற்றும் கல்லூரி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் வந்து ரத்த தானம் வழங்கினர்.ரத்த தானம் வழங்கிய நபர்களுக்கு கல்லூரி முதல்வர் இளங்கோவன் மற்றும் ரத்த வங்கி அலுவலர் அனுமந்தன் ஆகியோர் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்.
மேலும் சமூக ஆர்வலர்கள் முன்வந்து ரத்ததானம் வழங்க வேண்டுமென்று வேண்டுகோள் வைத்தார்.