தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறதா என்பதை பற்றி வேளாண் உதவி இயக்குனர் ராஜசேகர் ஆய்வு மேற்கொண்டார் .ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பிச்சம்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி மொட்டனூத்து, பாலக்கோம்பை தெப்பம்பட்டி ,மரிக்குண்டு , குன்னூர், ரெங்கசமுத்திரம், திம்மரநாயக்கனூர் ,ராஜகோபாலன் பட்டி உள்பட 30 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன .மளிகை பொருட்கள் ,அரிசி ,காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கிராமத்தினர் ஆண்டிபட்டி நகருக்கு தான் வரவேண்டியுள்ளது. தற்போது கொரானா வைரஸ் நோய் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டிபட்டி பகுதியில் பல கடைகள் மூடப்பட்டுள்ளது .அரசு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதற்கு மட்டும் நிபந்தனைகளுடன் காலை முதல் மதியம் ஒரு மணி வரை விற்பனை செய்யலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சில அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மட்டும் திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு சமூக விலகளுடன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரிசி பருப்பு ,மளிகை பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறதா என்பதை ஆண்டிபட்டியில் வேளாண் துறை உதவி இயக்குனர் ராஜசேகர் ஒவ்வொரு கடையாக சென்று ஆய்வு மேற்கொண்டு வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பொருட்களை வாங்கி செல்லுமாறும் தரமான பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று கடைக்காரர்களை அறிவுறுத்தினார்.
ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள கடைகளில் உதவி வேளாண் இயக்குனர் ஆய்வு .