குலசேகர நல்லூர் ஊராட்சியில் கிருமி நாசினி தெளிப்பு
திருச்சுழி அருகே குலசேகர நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட குலசேகர நல்லூர், மடத்துப் பட்டி, மஞ்சம்பட்டி, டி.ஆர்.எஸ் காலனி, மேலகண்ட மங்கலம் ஆகிய கிராமங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஊராட்சிதலைவர் சிவ மாரியப்பன் மஞ்சள், வேப்பிலை, வசம்பு, கோமியம், உப்பு, லைசால், வாசனை திரவியங்கள் ஆகிய 7 வகை நோய் தடுப்பு மருந்துக்களை கலந்து வீடுகள், கிராம சாலைகள் முழுவதும் தெளித்தும், விளிப்புணர்வு ஏற்படுத்த நோட்டிஸ் மூலம் வீடு வீடாக வழங்கினார்கள் இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் பழனிக்குமார் உட்பட தன்னார்வலர்கள் இணைந்து செயல்பட்டனர்