திருச்சுழியில் எமதர்மராஜா மூலம் கொேரானா விழிப்புணர்வு பிரச்சாரம்
திருச்சுழியில் தனியார் மேல்நிலைப் பள்ளியும் வருவாய்த் துறையினரும் இணைந்து கிராம மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் பள்ளி மாணவர் எமதர்மன் வேடம் அணிந்து பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.
எமதர்மன் விழிப்புணர்வை துணை ஆட்சியர் கிருஷ்ணவேணி மற்றும் திருச்சுழி தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
எமதர்ம ராஜா மூலம் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு முகக்கவசம் அணிவித்து, கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப் பட்டன.
இதில் திருச்சுழி மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட ஆசிரியர்கள் கதிரேசன், அண்ணாத்துரை, கனகராஜ் மற்றும் தலையாரி இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்
திருச்சுழி நகர்ப்பகுதி முழுவதும் எமதர்மன் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்கள் மத்தியில் மேற்கொள்ளப் பட்டது.
எமதர்மன் போன்று வேடமணிந்து மேற்கொள்ளப் பட்ட இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.