விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகளுக்கு நஷ்டஈடு கேட்டு வழக்கு தாக்கல்





விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகளுக்கு நஷ்டஈடு கேட்டு வழக்கு தாக்கல்

 

கொரோனா-ல் 10 பேர் இறந்தால், வாங்கிய கடனை அடைக்க முடியாமலும், விளைந்த பயிர்கள் அழிகின்றது என்ற கவலையில் 100 பேர் சாவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதற்காக,  ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 20, 000/- நஷ்டஈடு கொடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது - தொடர்பாக. 

 

அன்புடையீர் வணக்கம், 

     கடந்த 30 நாட்களாக கொரோனா தாக்கிவிடும் என்பதற்காக வேலைக்கு செல்லாதவர்களுக்கும்,  மற்ற உழைக்கும் கலைஞர்களுக்கும் ரூ. 1000/- இனாமாகவும்,  காய்கறிகள்,  உணவு பொருட்களை இனாமாகவும், அம்மா உணவகத்தில் இலவசமாக சாப்பாடும் கொடுத்தார்கள். இதனை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால்,  இந்த உணவுபொருட்களை இலட்சக்கணக்கில் செலவு செய்து சாகுபடி செய்த விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு ரூ. 20,000/- வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் *WP  No. 7521/2020* என்ற வழக்கு-னை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தொடுத்துள்ளது. 

     ஒரு ஏக்கர் வாழை,  வெற்றிலை,  சாகுபடி, செய்ய ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை செலவாகிறது,  வாழையிலே வாழைபழம் பழுத்துகிடக்கிறது,  சூராவளி காற்றினால் அழிந்துவிட்டது,  வெற்றிலை காய்கிறது,  விஷேசங்களும்,  உணவகங்களும் இல்லாததால் வாழை இலைகள் வாழையிலே கிழிந்து தொங்குகின்றன. 

     ஏக்கருக்கு ரூ.70,000/- செலவு செய்து நட்ட ஜூஸ் கரும்பு வெட்டுவதற்கு ஆள் இல்லாமலும்,  ஜூஸ் கடைகள் இல்லாததால் காய்கின்றது. 

     ஏக்கருக்கு ரூ. 20,000/- முதல் ரூ. 40,000/- வரை செலவு செய்த நெல்மணியை வாங்குவதற்கு ஆள் இல்லாமல் கிடக்கிறது. 

     மல்லிகை,  ரோஜா,  செவ்வந்தி பூக்கள் எல்லாம் பறிக்க முடியாமல் வயலிலே காய்ந்து கொட்டுகிறது. 

     தர்பூசணி,  முலாம்,  எலுமிச்சை,  வெள்ளரி, திராட்ஷை போன்ற பழங்கள் வாங்குவதற்கு  ஆள் இல்லாமலும்,  பறிக்க முடியாமலும் வயலிலே பழுத்து வீணாகிறது. 

      கொடைமிளகாய் அழுவி வயலிலே வீணாக கிடக்கிறது. 

      கொரோனா-க்கு முகக்கவசம் தயாரிக்க மூலபொருளான  பஞ்சை உற்பத்தி செய்யும் விவசாயிகள் பஞ்சை விற்க முடியாமல் பரதேசியாக நிற்கின்றனர். 5 ரூபாய் முகக்கவசம் 50 ரூபாய்க்கு விலை விற்கிறது. 

      உளுந்து,  குச்சிவள்ளிகிழங்கு,  கடலை, மக்காசோளம் கடன் வாங்கி போட்ட விவசாயிகள் கடனை அடைக்க முடியாமல் அழைக்கின்றனர். 

     எல்லாரையும் கவனிப்பதாக  கூறும் அரசு, ஊருக்கெல்லாம் உணவு படைக்கும் விவசாயியை காப்பாற்ற வேண்டாமா..?  

     மரம் ஏற ஆள் இல்லாமல் தேங்காய்யும், விற்க முடியாமல் மாங்காயும்,  பலாபழமும் வீணாக அழுவி கொட்டிகிடக்கிறது.

     கண்ணீரை வரவழை க்கும் பெரிய வெங்காயத்தின் விலையோ கிலோ ரூ. 5/- முதல் 10 ரூபாய்க்கு விலை போகிறது. 

     இதுதொடர்பாக மாண்புமிகு. தமிழக முதல்வருக்கும்,  மாண்புமிகு.  பாரத பிரதமருக்கும் விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று மனு கொடுத்தும் பதில் வராததால்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு WP No.: 7521/2020-யை இணையதள மூலமாக வழக்கு போட்டு (வழக்குரைஞர் முத்துகிருஷ்ணன்,  வழக்குரைஞர் ஸ்ரீதர்) நிலுவையில் உள்ளது. 

     கடனாலும்,  விவசாய விளைபொருட்கள் அழிந்ததாலும்,  உலகில் உள்ள வல்லரசு நாடுகளை எல்லாம் மிரட்டி கொண்டிருக்கின்ற  படுபயங்கர கொரோனா வைரஸ்-ல் இறப்பவர்கள் 10 பேர் என்றால்,  தற்கொலை செய்யும் விவசாயிகள் 100 பேராக மாறிவிட கூடாது என்பதற்காகவும்,  விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யுங்கள் என்பதற்கும் சமூக இடைவெளி விட்டு வாயில் முகக்கவசம் அணிந்து 10 அடிக்கு ஒருவர் திருச்சி to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உட்கார அனுமதி கொடுங்கள் அல்லது எங்கள் கோரிக்கைகளான ஏக்கருக்கு ரூ. 20,000/- நஷ்டஈடும்,  அனைத்து விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யுங்கள் என்று தமிழக அரசையும்,  மத்திய அரசையும் வலியுறுத்துங்கள் என்று மறுபடியும் ஒரு மனு தாக்கல் செய்ய உள்ளோம் என்பதை இவ்வாறு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் P. அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். 

 






Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image