புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கேகே செல்லபாண்டியன் தலைமையில் குன்றாண்டார்கோவில் மேற்கு ஒன்றியம், வைத்தூர், தென்னங்குடி, மூட்டாம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள பொதுமக்களுக்கு, அவர்களின் வாழ்வாதார நலன் கருதி, அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள், காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களும், கிருமி நாசினி, முகக் கவசம், வேட்டி சேலை,
வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் , ஒன்றிய பெருந்தலைவர் கே.என்.போஸ், ஒன்றிய கவுன்சிலர் ம.சுந்தர்ராஜன், தென்னங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பையா, வைத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜ், மூட்டாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாஸ்கர், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஒ.ஆறுமுகம், வைத்தூர் சிவக்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பாதுகாப்பு இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.