ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதி நம்பியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கெட்டிசெவியூர் ஊராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அறிவுறுத்தலின் படி அப்பகுதியில் உள்ள தோட்டம், காடுகள் மற்றும் வீடுகளுக்கு பவர் ஸ்பிரேயர் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.மேலும் கெட்டிசெவியூர் ஊராட்சியில் உள்ள அனைத்து வீதிகளிலும் வடிகால் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் மகுடேஸ்வரன், முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் கருப்புசாமி, வார்டு உறுப்பினர்கள் நாகரத்தினம், செல்வி உட்பட பலர் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதி நம்பியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கெட்டிசெவியூர் ஊராட்சியில்