திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா வைரஸ் குறித்து அரசு அலுவலர் களுடன் ஆய்வு
திருச்சுழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளபட்டு வரும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னைச்சரிக்கை நடவடிக்கைகளை திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்
ஆலோசனை கூட்டத்தில் அவர் கூறுகையில் துப்புரவு பணியாளர்கள் பொது சுகாதாரத்தில் இன்னும் கூடுதலாக நடவடிக்கை எடுக்க வேண்டும், கருவுற்ற தாய்மார்களுக்கு சிறப்பான முறையில் கண்காணிக்க வேண்டும், வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், இறைச்சி கூடங்களில் சமுக இடைவெளி கடைபிடிக்க காவல் துறை உதவியை பயன்படுத்த வேண்டும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரிய கிராமங்களில் உள்ள சாலைகளில் கிரிமி நாசினி தெளிக்கும் போது தீயணைப்பு துறை சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் .இது போல வரக் கூடிய காலங்களிலும் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார் நிகழ்ச்சியில் ஒன்றிய குழுத் தலைவர் பொன்னுத் தம்பி, துணைத் தலைவர் மூக்கையன், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர் நாகஜோதிதொல்காப்பியன், மண்டபசாலை ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி பாண்டியன், ஊராட்சி உதவி இயக்குனர் உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, திருநாவுக்கரசி, மேலாளர் செல்வராஜ், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், சுகாதார துறை ஆய்வாளர் லட்சுமி நாராயணன் இஞ்சினியர்கள் காஞ்சனாதேவி, புரோஸ்கான் உள்பட திருச்சுழி யூனியன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்