ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பள்ளிக்கல்வி மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு கே ஏ செங்கோட்டையன் அவர்கள் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையில் 24 மணிநேரமும் செயல்படும் நடமாடும் காய்கறி சந்தை வாகனம் தொடங்கிவைத்து மலிவுவிலை அனைத்து காய்கறிகளும் அடங்கிய பைகளை பொதுமக்களுக்கு வழங்கினார் . மேலும் பெல் நிறுவனத்தின் உதவியுடன் புதிய ராஷ்ட் சத இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி முதல்முறையாக கோபிச்செட்டிபாளையம் பகுதியில் துவக்கிவைத்துபள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்கள் சந்திப்பு.
ஊரடங்கு உத்தரவு வருவதற்கு முன்பே அடுத்த கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள் நோட்டு புத்தகங்கள் 90 சதவிகிதம் தயாா் நிலையில் உள்ளது.
தனியாா் பள்ளிகளில் ஊரடங்கின் போது மாணவா்களின் கல்வி கட்டணம் கட்டாய வசூல் செய்யப்படுவது குறித்து கவனத்திற்கு கொண்டு வந்தால் அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்..
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே முன்மாதிாி மாநிலமாக திகழ்கிறது.
முதல்வாின் அறிவுரைப்படி 24 மணி நேரமும் செயல்படும் வகையில் நடமாடும் காய்கறி வாகனசந்தை அமைக்கப்பட்டுள்ளது.
பெல் நிறுவனத்தின் உதவியுடன் புதிய ராஷ்சத இயந்திரம் மூலம் கிருமி நாசினியை புகையாக தெளிக்கும் பணி தமிழகத்தில் முதல்முறையாக ஈரோடு மாற்றும் கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல்படுத்தப்படவுள்ளது...
நகராட்சி பேருந்து நிலையத்தில் கடை வைத்திருப்பவர்கள் 2. மாதவாடகை நகராட்சியில் கேட்கமாட்டார்கள்
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கவும் அடிப்படை வசதிகள் கிடைக்கவும் தட்டுபாடு ஏற்பட்டால் கோபி வருவாய் கோட்டாட்சியரையோ அல்லது நகராட்சி ஆணையாளரையோ தொலைபேசியில் தொடர்பு கொண்டால் நடவடிககை மேற்கொள்ளப்படும்.
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் நகைக்கடன் கட்டாய வசூல் குறித்து புகாா் வந்தால் முதல்வாின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்
என அமைச்சா் தொிவித்துள்ளாா்.
அருகில் கோட்டாட்சியர் ஜெயராமன் தாசில்தார் சிவசங்கர் நகராட்சி ஆணையாளர் தாணு மூர்த்தி நில வருவாய் ஆய்வாளர் ரஜிக்குமார் முன்னாள் சேர்மன் கந்தவேல்முருகன் சொசைட்டி தலைவர் காளியப்பன் மாவட்ட முன்னாள் மாணவரனி செயலாளர் பிரினியோ கணேஸ் எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் ஜி.எம் விசுவநாதன் நகர மாணவரணி செயலாளர் செல்வராஜ் வேணுகோபால் மற்றும் சுகாதர அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்