உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரசஸ் சீனாவிலிருந்து பரவி நாடுமுழுவதும் எண்ணற்றோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் புதிதாகவும் பாதிக்கப்பட்டும்
சிகிச்சைையெடுத்து நலமுடன் திரும்பி வருகின்றனர்.இதனால்இந்த கொரோனா வைரஸ் நோய் தாக்குதலிருந்து தப்பிக்கவும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து தப்பிக்கவும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதற்கு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இந்தியா மற்றும் உலக நாடுகள் முழுவதும்ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகிறது. மேலும் இந்தியா உட்பட உலகம் முழுவதும் எட்டு லட்சத்திற்கும் மேலான மக்கள் கொரானா வைரஸ் எனும் கோவிட்-19 பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழகஅரசும்,சுகாதாரத்துறையும் அர்ப்பணிப்புடன் முதல்அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் காலம் நேரம் பார்க்காமல் தகுந்த நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுத்து வருகிறார். அதேபோல் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் கோயிலில் மற்றும் அம்மா மண்டபம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏழை எளிய மக்களுக்கு (அதிமுக) கட்சியை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் தலைமையில் முக கவசம்,உணவு பொட்டலங்கள், தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டன .இந்நிகழ்ச்சியில் இ.பி. ஏகாம்பரம், படையப்பா ரெங்கராஜ் ,ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் 1-வது வார்டு சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.