தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாலசமுத்திரத்தில் கம்மவார் சரஸ்வதி நடுநிலைப்பள்ளி என்ற பெயரில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 125 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.தற்பொழுது கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.அதன்படி இப்பள்ளியில் பயிலும் 125 மாணவ மாணவிகளின் குடும்பத்திற்கும் அரிசி,மளிகை பொருட்கள், காய்கறிகள்,சர்க்கரை உப்பு,கிருமிநாசினிகள்,முகக் கவசங்கள் உட்பட அனைத்து பொருட்களும் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவியரின் பெற்றோரிடம் பள்ளியின் செயலாளர் கவிதாலாய சரவணன் வழங்கினார்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாலசமுத்திரத்தில் கம்மவார் சரஸ்வதி நடுநிலைப்பள்ளி