திருச்சி அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்குவதற்காக ஒன்றரை லட்சம் நிதியினை அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் வழங்கினாா். கீழப்புலிவாா்டு ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தில் அதிகளவு ஏழை எளிய மக்கள் உணவருந்தி வருகின்றனா். இந்நிலையில் இந்த உணவகத்திற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கிடும் வகையில் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் நிதி வழங்கி உள்ளாா். கிழக்கு சட்டமன்ற உறுப்பினா் நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ள ஒன்றரை லட்சம் ரூபாய் நிதியினை ஆதாரமாக கொண்டு ஊரடங்கு உத்தரவு முடியும் வரையில் அனைவருக்கும் இங்கு இலவச உணவு வழங்கப்படும். இந்த நிதி வழங்கும் நிகழ்ச்சியில் அதிமுக பகுதி செயலாளா் அன்பழகன், ஜவஹா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
திருச்சி அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்குவதற்காக ஒன்றரை லட்சம் நிதியினை அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் வழங்கினாா்.