மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெற்று சமையல்காரர்கள் மூலம் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி உணவு தயாரித்து வாகனம் மூலம் மதுரையின் பல்வேறு இடங்களுக்கு சென்று தன்னார்வ தொண்டர்களை வைத்து உணவு பொட்டலங்களை அளித்து வருகின்றனர்



தி மு க தலைவர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஒன்றினைவோம் வா என்ற கொள்கைக்கு ஏற்ப தினந்தோறும் மதுரை நகர் உட்பட மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு கொரானா நிவாரணம் அளித்து வரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் - பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் குவியும் பாராட்டு

 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு மாத காலமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வேலைக்கு செல்பவர்கள், கூலி தொழிலாளர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி போய் உள்ளனர்.

 

இதனால் ஏழை எளிய மக்கள் உட்பட நடுத்தர வர்க்கத் தினர் மிகவும் சிரமபட்டு வரும் நிலையில் அரசு உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கொரானா நிவாரணம் அளித்து வருகிறது.

 

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஒன்றினைவோம் வா என்ற கொள்கைக்கு ஏற்பஅந்தந்த மாவட்டம், வட்டம், பகுதி நிர்வாகிகள் தொண்டர்களுக்கு கொரானா நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 

அதன் ஒரு பகுதியாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கும் மதுரையை சேர்ந்த இளமகிழன் கடந்த மார்ச் 28/3/2020 முதல் நாள்தோறும் மதுரை நகர்  பழங்காநத்தம், ஜீவா நகர், ஜெய்ஹிந்த்புரம், காளவாசல்உட்பட நகர் பகுதி முழுவதும் மற்றும் புறநகர் பகுதி களான திருநகர், திருப்பரங்குன்றம், கூடல்நகர், வேடர்புளியங்குளம் ஹார்விபட்டி, திருமங்கலம் உட்பட மாவட்டம் முழுவதும் 

 

ஒவ்வொரு தினமும் ஆதரவற்றோர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள், திருநங்கைகள், கூலி தொழிலாளர்கள், 

 

ஏழை எளிய மக்கள் உட்பட நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் அனைவர்க்கும் நாள்தோறும், அரிசி, பருப்பு உட்பட மளிகை பொருட்கள், சாலைகளில் சுற்றி திரியும் ஆதரவற்றோர்களுக்கு மூன்று வேளையும் உணவு பொட்டலங்கள் வழங்கபட்டு வருகிறது.

 

மேலும் இவர் நாளொன்றுக்கு 1500 நபர்களுக்கு அதாவது காலை 500 நபர்கள், மதியம் 500, இரவு 500 நபர்கள் வீதம் உணவு அளித்து யாரும் பசியால் இருக்க கூடாது என்பதற்காக பசியாற்றி சமூகசேவையாற்றி வருகிறார்.

 

இதற்காக மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதி பெற்று சமையல்காரர்கள் மூலம் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி உணவு தயாரித்து வாகனம் மூலம் மதுரையின் பல்வேறு இடங்களுக்கு சென்று தன்னார்வ தொண்டர்களை வைத்து உணவு பொட்டலங்களை அளித்து வருகின்றனர்.

 

வருமானம் இன்றி தவித்து வரும் திருநங்கைகளுக்கும் உணவு உட்பட நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

 

மேலும் இந்த ஊரடங்கினால் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வரும் ஆட்டோ, வேன், டாக்ஸி உள்ளிட்ட ஒட்டுனர்களுக்கும் நிவாரணங்களை அளித்து வருகிறார்.

 

மேலும் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் என்று ஆங்காங்கே கூடும் இடங்களில் நாடகம் நடித்து நாடோடிகளாக வாழ்ந்து வரும் நாடக கலைஞர்கள், தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரிசி, பலசரக்கு, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களையும் அளித்து வருகிறார்.

 

இவருடைய இச் செயலுக்கு பொது மக்களும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image