தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கன்னியப்ப பிள்ளை பட்டி ரேசன் கடை முன்பு சேரில் அமர்ந்து அரசின் நிவாரணத் தொகையும் , பொருள்களையும் பெற்றுச் சென்றனர்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் தாக்குதலால் இந்திய நாடும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய மாநில அரசுகள் கொரானா வைரஸ் அச்சுறுத்தலை கட்டுக்குள் கொண்டுவர, சமூக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதன் அடிப்படையில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என்றுஅரசுகள் கேட்டுக்கொண்டு ,அதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களின் சிரமத்தை கவனத்தில் கொண்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் ஆயிரம் நிவாரணத் தொகையும் ,அரிசி ,பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது .அதனடிப்படையில் ஆண்டிபட்டி அருகே கன்னியப்ப பிள்ளைப்பட்டியில் 861 குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 4 நாட்களாக குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையும் ,பொருட்களும் வழங் கப்பட்டு வருகிறது .பொதுமக்களின் நலன் கருதி ரேஷன் கடை முன்பாக பைபர் சேர்கள் போடப்பட்டு அமரச் செய்து,ஒவ்வொருவராக அழைத்து நிவாரணத் தொகையும் பொருட்களும் வழங்கப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது.