முதுகுளத்தூர் அருகே விளங் குளத்தூர் மற்றும் குமார குறிச்சி ஊராட்சிகளில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டன.
விளங்குளத்தூர் ஊராட்சியில் முதுகுளத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.தர்மர் தலைமையில் ஊராட்சி தலைவர் கனகவள்ளி முத்துவேல் முன்னிலையில் கபசுர குடிநீர் கிராம மக்களக்கு விநியோகம் செய்யப்பட்டன. ஊராட்சி பகுதி முழவதும் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டன.
குமார குறிச்சி ஊராட்சி முதுகுளத்தூர் ஒன்றியம் குமார குறிச்சி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் தலைமையில் ராமலிங்கபுரம் கிராமத்தில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டன.
கிராமம் முழுவதும் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டன. பொதுமக்களுக்கு முக கவசம் ஊராட்சியின் சார்பில் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன.