சேலம், கருங்கல் பட்டியில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில் மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்துள்ளதால், பாதிப்படைந்த தேவாங்கர் சமூக நெசவாளர்கள், கூலி தொழிலாளர்கள் 225 குடும்பங்களுக்கு அரிசி 10 கிலோ மற்றும் மளிகை பொருட்களை சேலம் தேவாங்கர் கல்வி மருத்துவ அறக்கட்டளை மற்றும் அகில இந்திய தேவாங்கர் நல அறக்கட்டளை ஆகியோர் இணைந்து வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு சேலம் தேவாங்கர் கல்வி மருத்துவ அறக்கட்டளை மற்றும் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் கல்லாங்காடு சரவணன் தலைமை தாங்கினார். அகில இந்திய தேவாங்கர் நல அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் குணசேகரன் முன்னிலை வகித்தார் மற்றும் ஜெயபால், அன்னபூரணி, சோமசுந்தரம், நரசிம்மராஜு, சூரிய நாராயணன், அழகிரிநாதன், அட்டை.சண்முகம், தங்கராஜ், ராமலிங்கம், சிவசக்தி வெங்கடேஷ், வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேலம், கருங்கல் பட்டியில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நோக்கில்