உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகாகவும், ஊரடங்கு அமலில் உள்ள போது வறுமையால் வாடும் குடும்பங்களுக்கு நலத்திட்டங்களை தமிழக அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு உதவிகள் செய்து வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியரும், தன்னுடன் பணிபுரியும் உதவி ஆசிரியரும் சேவை செய்தது குறிப்பிடதக்கது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகதேவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 23மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் தினக்கூலி செய்து வருவதை தொடர்ந்து,நாகதேவம் பாளையம், வெள்ளை பெரிச்சி புதூர்(ஊஞ்சகரை )ஆகிய கிராமங்களில் வசிக்கும் மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1000ரூபாய் மற்றும் பழம் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. கு. ஜெயந்தி கிருஷ்ணன்,உதவி ஆசிரியர் ஆ. மயில்சாமி ஆகியோர் மாணவர்களின் இருப்பிடத்திற்க்கு சென்று வழங்கினார்கள்.இதனை மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்களை பெரிதும் பாராட்டினர்.
தமிழக அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு உதவிகள் செய்து வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியரும், தன்னுடன் பணிபுரியும் உதவி ஆசிரியரும்