முதுகுளத்தூர் அருகே மாணவர் மன்றம் சார்பில் பேரையூரில் 9 வார்டுகளை மூடி உள்ளே வருபவர்களுக்கு சானி டைசர் மூலம் கைகளை கழுவி அனுமதிக்கின்றனர்
அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரன் பாராட்டு
முதுகுளத்தூர் அருகே பேரையூரில் மாணவர்கள் மன்றம் சார்பில் 9 வார்டு களையும் மூடி உள்ளே வருபவர்களுக்கு சானி டை சர் மூலம் கைகளை கழுவி விட்டு அனுமதிக்கின்றனர் இவர்களை அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகர் பாராட்டினர்.
முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூரில் மாணவர் மன்றம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையாக பேரையூரில் 9 வார்டுகளையும் மூடி விட்டனர் .
பேரையூரில் நுழைபவர்களுக்கு சானி டை சர் மூலம் கைகளை கழுவி விட்டு அனுமதிக்கின்றனர் .அனைவரும் முக கவசம் அணிந்து வரவும் அறிவுறுத்தியுள்ளனர்
பாராட்டு: பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரின் சொந்த ஊர் பேரையூர் ஆகும் . இங்கு மாணவர் மன்ற சார்பில் 144 உத்தரவு தொடக்கம் முதல் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையில் மாணவர் மன்ற செயல் படுத்தி வருவதையொ டி மாணவர்கள் மன்ற தலைலர் ராஜசேகரன் செயலாளர் பார்த்திபன் பொருளாளர் மணிமுத்து ஆகியோரை அதிமுக சட்டமன்ற உறுப்பிணர் சதன் பிரபாகர் பாராட்டினார்.