ஓசூர
இந்த போராட்டம் நிறைந்த நெருக்கடியான காலகட்டத்தில், ஒட்டுமொத்த உலகமும் நோய்த்தொற்றினால் பல கடினமான சூழல்களைக் எதிர்கொண்டு வருவது நீடிக்கும் நிலையில், டிவிஎஸ் குழுமத்தின் ஒரு அங்கமாக விளங்கும் ’சுந்தரம் ஆட்டோ கம்பொனண்ட்ஸ் லிமிடெட்’ (SACL - Sundaram Auto Components Limited), கோவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் அத்தியாவசிய பணிகளை மேற்கொண்டு வரும் காவல் துறை அதிகாரிகள், சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அணிவதற்கு செளகரியமான, நீடித்து உழைக்கக்கூடிய உயர்தர முகக்கவசங்கள் தயாரிக்கும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது.
ஓசூரில் உள்ள ’சுந்தரம் ஆட்டோ கம்பொனண்ட்ஸ் லிமிடெட்’டின் உற்பத்தி மையத்திலேயே இந்த முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி தெளிவான பார்வையைப் பெறும் வகையில் முழுவதும் ஒளி ஊடுருவக்கூடிய பிளாஸ்டிக் தாள் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த முகக்கவசங்கள், சுழலும் பொறியியல் முறையிலான ஸ்விவெல்லிங் இயந்திர நுட்பம் (swivelling mechanism) மற்றும் தக்க வைக்கும் அமைப்புள்ள ரீடெயன் சிஸ்டம் (retainer system) ஆகியவற்றைக் கொண்டவை. பணியாளர்களின் சமூக இடைவெளி மற்றும் பணியிடத்தில் நோய்த்தொற்றாமலிருக்கப் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறைகளின் மீது சிறப்புக் கவனம் கொண்டு இந்த முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ’சுந்தரம் ஆட்டோ கம்பொனண்ட்ஸ் லிமிடெட்’ [எஸ்ஏசிஎல்],.டி.குமரேசன், துணை ஆட்சியர், .சி.அங்கு, துணைக் காவல் கண்காணிப்பாளர், கே. பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையர், ஓசூர் மற்றும் எஸ்.பிரபாகர், மாவட்ட ஆட்சியர், கிருஷ்ணகிரி ஆகியோரிடம் இந்த முகக்கவசங்களை ஒப்படைத்துள்ளது.