திருச்சியி்ல் முக்குலத்தோர் புலிப்படை மற்றும் ஜெயின் குழு சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
முக்குலத்தோர் புலிப்படை மற்றும் திருச்சி ஜெயின் குழுவின் சார்பில் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு தங்களால் ஆன உதவிகள் செய்யுமாறு முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகை கருணாஸ் தெரிவித்திருந்தார்.
இதன்படி திருச்சியில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் வாழ்வாதாரம் இன்றி தவித்த மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை சாமான்கள் பீமநகர் மற்றும் மார்க்கெட் பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டன. இதில் சானா கார்த்திக், மணிகண்டன், முத்துராமலிங்கம் மற்றும் ஜெயின் குரூப் உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஏழை மற்றும் வாழ்வாதரம் இன்றி தவித்த மக்களுக்கு வழங்தப்பட்டது.