பரமக்குடி ஒன்றியத்தில் கிராம மக்களுக்கு காய்கறி பொருட்கள் வழங்கல்
பரமக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட அரியனேந்தல் கிராமத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், போகலூர் ஒன்றியம் சமத்துவபுரத்தில் உள்ள நூறு குடும்பங்களுக்கும், எஸ். கொடிக்குளம், சேமனூர் உள்பட பல்வேறு கிராம மக்களுக்கும் இலவசமாக காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
பரமக்குடி எம்.எல்.ஏ., சதன் பிரபாகர் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
பரமக்குடி யூனியன் துணை தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். அரியனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, துணைத்தலைவர் பாப்பா சிவக்குமார், அ.தி.மு.க., பிரதிநிதி ஓவியர் சரவணன், பேரையூர் முனியசாமி, அண்ணா தொழிற்சங்க திருமுருகன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
எம்.எல்.ஏ., சதன் பிரபாகரன் கூறியதாவது, பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, தினமும் 1000 குடும்பங்களுக்கு காய்கறிகள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தொலைதூரத்தில் உள்ள கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் தேவைப்பட்டால், என்னை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என்றார்..