நெல்லை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் - மாநகராட்சி ஆணையருக்கு மேலப்பாளையம் பொதுநலக்குழு கோரிக்கை
நெல்லை: மேலப்பாளையம் மக்களுக்கு "பூரண மருத்துவம்" கிடைக்க

 

வெளியிடங்களில் பணியாற்றும்

உள்ளூர் மருத்துவர்களை

"தற்காலிக பணியிடமாற்றம்" செய்ய வேண்டும்

 

மாவட்ட ஆட்சியர் - மாநகராட்சி ஆணையருக்கு

மேலப்பாளையம் பொதுநலக்குழு கோரிக்கை

 

       நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மக்களுக்கு "பூரண மருத்துவம்" கிடைக்க, வெளியிடங்களில் பணியாற்றும் உள்ளூர் மருத்துவர்களை "தற்காலிக பணியிட மாற்றம்" செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

        இதுகுறித்து மேலப்பாளையம் பொதுநலக்குழு நிறுவனர் எம்.முகம்மது யூனுஸ் , நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் ஜி.கண்ணன் ஆகியோருக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

        நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் "கோரோனா" நோய் தொற்றை முன்னிட்டு தனியார் மருத்துவமனை மருத்துவர்களே நோயின் கொடுமைக்கு பயந்து தங்கள் ஆஸ்பத்திரியை மூடிவிட்டனர். 

         பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து, அவர்கள் அளித்து உத்தரவின் பேரில் மேலப்பாளையத்தில் உள்ள சில தனியார்  ஆஸ்பத்திரிகள் குறைந்த கால அளவு நேரத்தோடு, அரைகுறை மனதோடு பெயரளவில் பணியாற்றுகிறார்கள்.

        இந்நிலையில் நெல்லை மாவட்டத்தின் வெளியிடங்களான கூடங்குளம், தென்காசி, மாறாந்தை, ஆலங்குளம், கயத்தாறு போன்ற இடங்களில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ஆஸ்பத்தியில் பணியாற்றும் "மேலப்பாளையம் வாழ் உள்ளூர் மருத்துவர்களை" மேலப்பாளையத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி செய்ய "தற்காலிக பணியிட மாற்றம்" செய்ய வேண்டும்.

        இதன்மூலம் அந்த மருந்துவர்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதி என்பதால், எந்தவித அச்சமும் இல்லாமல் "அர்பணிப்புடன்" பணியாற்றுவார்கள். மேலப்பாளையம் மக்களும் தனியார் மருத்துமனையை எதிர்பார்க்காமல் "பூரண மருத்துவம்" பெறமுடியும்.

       இவ்வாறு அவர் தமது கோரிக்கை மனுவில் தெரிவித்து உள்ளார்.

 

 

 

Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image