சேலம் கருங்கல்பட்டியில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்கும் முகாம் நடைபெற்று.
இந்த நிகழ்ச்சிக்கு, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் கல்லாங்காடு டி.எஸ்.சரவணன் தலைமை வகித்தார். பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற பொறுப்பாளர்கள் அண்ணாதுரை, மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் திருப்பதி டெக்ஸ் தங்கராஜ், சண்முகம், சுப்பிரமணி, சூரியநாராயணன், சித்துராஜ், ரவி, ராதாகிருஷ்ணன், ராஜபுவனா, ராமலிங்கம், அர்த்தனாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டி, களரம்பட்டி, செல்லகுட்டிக்காடு, கலைஞர் நகர் ஆகிய பகுதிகளிலும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.