"கொரோனா" வைரஸ் ஒழிப்புப் பணிய
பெங்களூருவில் சமூக தொண்டாற்றும் 'நெல்லை கார்த்திக் நாராயணன்'
காவல்துறை துணை ஆணையர்- எஸ்.பி பாராட்டு
நெல்லை
"கொரோனா" ஒழிப்புப் பணியில் நெல்லையைச் சேர்ந்த கார்த்திக் நாராயணன் சமூகத் தொண்டாற்றி வருகிறார். அவரது சேவையை பெங்களூரு காவல்த்துறை அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்த டாக்டர் கார்த்திக் நாராயணன் "அன்புடன் சாப்பாடு" என்ற பெயரில் சமூக தொண்டு நிறுவனத்தை தொடங்கி நெல்லை மாவட்டத்திலும், திருவண்ணாமலை மாவட்டத்திலும் ஆதவற்றவர்களை ஆதரிக்கும் கரமாக இருந்து பல்வேறு சமுதாயப் பணிகளை செய்து வருகிறார். நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீசை நேரில் சந்தித்து தாம் செய்து வரும் சமூகப்பணி குறித்து விளக்கம் அளித்து நெல்லை ஆட்சியரின் பாராட்டையும் பெற்று இருக்கிறார்.
சமூக சேவகர் டாக்டர் கார்த்திக் நாராயணன், தற்போது சென்னையை தலைமையிடமாகக் கொண்டும், பெங்களூருவை கிளையாகக் கொண்டும், உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் "கொரோனா" வைரசுக்கு எதிராக "சுகாராதனா" என்ற பெயரில் மக்கள் நலஇயக்கம் நடத்தி வருகிறார்.
இந்த அமைப்பின் மூலம் ஏழை, எளிய- மக்களுக்கும், காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் களத்தில் இறங்கிப் பணியாற்றும் தன்னார்வத் தொண்டர்களுக்கும், அமெரிக்க "உணவு மற்றும் மருந்து நிறுவனம் (FDA), மற்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட. தரமான முகக் கவசங்கள், கை சுத்திகரிப்பான்கள் (Sanitizer), உணவுப் பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பண்டங்களை இலவசமாக வழங்கும் மகத்தான பணியைச் செய்து வருகிறார்.
இந்திய நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள சமூக சேவகர் டாக்டர் கார்த்திக் நாராயணன், "லிட் ஸ்கில்ஸ் லேனிர்ங்" (Lit Skills Learning) என்னும் ஆங்கிலக் கல்வி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக இருந்து, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் அருமையான ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் "ப்ராஜக்ட் இங்க்லிஷ்" (Project English) என்ற தி்ட்டத்தையும் குறைந்த கட்டணத்தில் நடத்தி வருகிறார்.
"லிட் ஸ்கில்ஸ் லேனிர்ங்" கல்வி மையத்தின் தலைமை செயல் அலுவலர் டாக்டர் கார்த்திக் நாராயணன், பெங்களூரு மாநகர காவல்துறை, ஒசூர் சபரி கண் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பிரசன்னா மற்றும் சி.எஸ்.ஆர் டைம்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் "சுகாதாரனா" அமைப்பின் மூலம் "கொரோனா" வைரஸ் ஒழிப்புப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி மக்கள் பணியைச் செய்து வருகிறார். உலத்தரம் வாய்ந்த முகமூடி, கை சுத்திகரிப்பான்கள் மற்றும் தேவையானவர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் இலவசமாக வழங்கி வருகிறார்.
இவது சேவையை கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகர காவல்துறை வடகிழக்கு பகுதி துணை ஆணையர் டாக்டர் பீமசங்கர் எஸ்.குலேத், சிக்கபல்லப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஜி.கே.மிதுன்குமார் ஆகியோர் பெரிதும் பாராட்டி உள்ளனர்.
மேலும் இதுபோன்ற மக்கள் நலப்பணிகளைச் செய்வது குறித்து செய்தியாளர்களிடம் சமூக ஆர்வலர் டாக்டர் கார்த்திக் நாராயணன் கூறியதாவதது:
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J. அப்துல் கலாம், 'தர்மஸ்தாலா மஞ்சுநாதா' நிறுவனத்தின் தர்மாதிகாரி டாக்டர் வீரேந்திர ஹெக்டே மற்றும் திருநெல்வேலி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோல்டன் ஜூப்ளி மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் நல்லாசிரியர் உஷாராமன் மற்றும் திரைப்பட நடிகர் அஜீத்குமார் ஆகியோரிடம் நான் கொண்ட பற்றும், பாசமும், அவர்களது ஆசியும் சமூகப்பணி செய்ய எனக்கு உத்வேகம் அளித்தது. நான் நடிகர் அஜீத்துமாரின் தீவிர ரசிகன். அவரைப்போன்று நானும் சமூகத்தொண்டு செய்ய வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு அதிகமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லை சமூக சேவகர் டாக்டர் கார்த்திக் நாராயணன், பெங்களூரு மாநகர காவல்த்துறை துணை ஆணையர் டாக்டர் பீமசங்கர் எஸ்.குலேத் மற்றும் சிக்கபல்லப்பூர் மாவட்ட எஸ்.பி. மிதுன்குமார் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.