தூத்துக்குடியில் போலீசார் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மனித உரிமை கழக அரசியல் கட்சியின் சார்பாக முக கவசங்கள் வழங்கப்பட்டது..
தூத்துக்குடி மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் 500 பேருக்கான முக கவசங்களை, மனித உரிமை கழக அரசியல் கட்சியின் மாநில வர்த்தக அணி செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளருமான ஜெபசிங் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலனிடம் வழங்கினார். அதுபோல, காவல் துறையினர் 500 பேருக்கான முக கவசங்களை மாநகர துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷிடம் வழங்கப்பட்டது..
இந்த நிகழ்ச்சியின் போது, தூத்துக்குடி கிழக்கு மாவட்ட செயலாளர் அருண் காமராஜ், மத்திய மாவட்ட செயலாளர் வினோத் ராஜ், மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் அனிதா எஸ்தர் உள்பட உறுப்பினர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்