முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடை பெற்ற மருத்துவ முகாமை ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.தர்மர் தொடங்கி வைத்து டெம்பரேச்சர் மற்றும் பிரஸர் சோதனை செய்து கொண்டார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் பி.சாவித்திரி முன்னிலை வகித்தார் வட்டார வளர்ச்சி அதிகாரி மங்களேஸ்வரி (கிராம ஊராட்சிகள்) அனைவரையும் வரவேற்றார் .
மேனேஜர்கள் சந்திரசேகரன் பாலதண்டாயுதம் மற்றும் ஊராட்சி மன்ற தலைலர்கள் செந்தில்குமார் (வெங்கள குறிச்சி) கனகவள்ளி முத்துவேல் (விளங் குளத்தூர் ) செந்தில் (குமார குறிச்சி ) நாகஜோதி ராமர் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி பொதுமக்களும் தங்களது உடலை பரிசோதனை செய்து கொண்டனர் .
பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டன.
கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் உமாமகேஸ்வரி, நெப்போலியன் ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்தனர். ஊராட்சி செயலர்கள், தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் திரளாக உடலை பரிசோதனை செய்து கொண்டனர் .