கமுதி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நரிக்குறவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்
சமூக ஆர்வலர்கள் பாராட்டு
கமுதி பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில், கொரோனாவால் ஓலை குடிசையில் முடங்கியுள்ள நரிக்குறவ குடும்பங்களுக்கு, உணவு பொருட்கள் இலவசமாக வழங்கபட்டது.
கொரோனா பாதிப்பால், ஏப். 14 வரை, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டுள்ளநிலையில், கிராமம், கிராமமாக சென்று பிழைப்பு நடத்தி வரும் கமுதி அருகே நாராயணபுரத்தில் உள்ள நரிக்குறவ குடும்பங்கள் உணவின்றி தவித்தது குறித்து, கமுதி தாலுகா பத்திரிகையாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நாராயணபுரத்தில் 80 குடும்பங்கள் வாழும் நரிக்குறவ குடும்பங்களுக்கு தலா 4 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு, தலா நுாறு ரூபாய் வழங்கும் விழா, நாராயணபுரம் ஊராட்சி துணை தலைவர் வேல்மயில்முருகன், சமூக ஆர்வலர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. உணவின்றி தவித்த நரிக்குறவ குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கிய, கமுதி தாலுகா பத்திரிக்கையாளர்கள் சங்கத்திற்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.