திருச்சுழியில் கொரோனாவை தொடர்ந்து முக கவசங்கள் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கர்சிப் மற்றும் துணிகளை கட்டிக் கொண்டு செல்கின்றனர் இதை கருத்தில் கொண்டு திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு திருச்சுழி அரசு மருத்துவமனை மற்றும் நரிக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் முக கவசங்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் வழங்கினார் பின் திருச்சுழி பஸ் நிலையத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் பாதுகாப்பு பணியில் இருந்த போலிசார் மற்றும் காய்கனி வாங்க வந்த பொதுமக்கள் திருச்சுழி ஆஸ்பத்திரி சாலையில் உள்ள பொதுமக்கள் மற்றும் வீடு தோறும் முக கவசங்கள் வழங்கப்பட்டது.திருச்சுழி மற்றும் நரிக்குடி கிராமம் முழுவதும் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட முக கவசங்கள் வழங்கப்பட்டது பின் பொதுமக்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளிடம் முககவசம் அணிந்து தான் வெளியில் வர வேண்டும், இடைவெளி விட்டு தான் நடக்க வேண்டும் எனக் கூறினார் இதில் மாவட்ட கவுன்சிலர்கள் போஸ், பாரதிதாசன், சிவக்குமார், திருச்சுழி ஒன்றிய குழுத் தலைவர் பொன்னுத் தம்பி, துணைத் தலைவர் முக்கையன், ஒன்றிய கவுன்சிலர் சந்தனப் பாண்டி ஊராட்சி மன்றத் தலைவர்கள் குச்சம்பட்டி பூபதி சாமிகண்ணு, குலசேகர நல்லூர் சிவ மாரியப்பன், கல்லூரணி முருகன், நரிக்குடி ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சிவநாராயணன், திருச்சுழி வடக்கு ஒன்றிய மாணவர் அணிஅமைப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்
திருச்சுழியில் கொரோனாவை தொடர்ந்து முக கவசங்கள் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கர்சிப் மற்றும் துணிகளை கட்டிக் கொண்டு செல்கின்றனர் இதை கருத்தில் கொண்டு திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு